கெஹெலியவின் மகன் கைது
புதிய இணைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரணை ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரமித் ரம்புக்வெல்லவை எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள அவரின் மகனும் இலங்கை கிரிக்கெட் வீரருமான ரமித் ரம்புக்வெல்ல, இன்று(21.05.2025) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிக்க முன்னிலையாகியுள்ளார்.
கெஹெலிய ரம்புக்வெல்ல, நேற்றையதினம்(20.05.2025) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டார்.
அவரை அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான வங்கிக் கணக்குகள்
அத்துடன், கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை இந்த வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்நிலையில், கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி, மகன் மற்றும் மகளின் பெயரில் பராமரிக்கப்படும் சந்தேகத்திற்கிடமான வங்கிக் கணக்குகள் குறித்து மத்திய வங்கி மூலம் சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

NEW பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 12 நிமிடங்கள் முன்

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
