ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் நான்கு பேர் ஒரு படகுடன் கைது
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 88 விசைப்படகுகளில் 400 இற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் கடந்த திங்கட்கிழமை மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
அதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த விசைப்படகொன்று தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அந்த ஒரு படகையும் அதிலிருந்த நான்கு கடற்தொழிலாளர்களையும் கைது செய்து மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
முதற்கட்ட விசாரணையை முடித்துக் கொண்டு கடற்தொழிலாளர்கள் நான்கு பேரையும் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக இலங்கை கடற்படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை ராமேஸ்வரத்தை சேர்ந்த 25 விசைபடகுகளும், அதிலிருந்த 185 கடற்தொழிலாளர்களும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 14 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
