தாய் ஒருவர் மகளுக்கு செய்த கொடூரம் - தென்னிலங்கையில் நடந்த மோசமான செயல்
களுத்துறை, பதுரலிய பிரதேசத்தில் தனது 12 வயது மகளை தகாத தொழில் ஈடுபடுத்திய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் பதுரலிய மொல்காவா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.
கடந்த 14 ஆம் திகதி சிறுவர் மற்றும் பெண்கள் விவகார பணியகத்திற்கு பாதிக்கப்பட்ட சிறுமியிடம் இருந்த கிடைத்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகள் காப்பகம்
தாயிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுமி தற்போது கடவத்தை குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
தனது தாய்க்கு தெரிந்தே தன்னுடன் பலரும் தகாத உறவு கொண்டதாகவும், அவர்கள் கொடுத்த பணத்தை தான் தாய்க்கு கொடுத்ததாகவும் சிறுமி கூறியுள்ளார்.
தாய் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இது குறித்து முன்னதாகவே பொலிஸாரிடம் தெரிவிக்கவில்லை என சிறுமி குறிப்பிட்டுள்ளார்.
பதுரலிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




