வனவளத் திணைக்களத்தால் கையகப்படுத்தப்படட காணிகள் - குளங்களை விடுவிக்க நடவடிக்கை

Google Vavuniya Government Of Sri Lanka
By Thileepan Jul 03, 2025 11:06 PM GMT
Report

வவுனியாவில் கூகுள் வரைபடம் மூலம் வனவளத் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட 25 ஆயிரம் ஏக்கர் காணிகள் மற்றும் குளங்களை விடுவிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை முன்னெடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (03.07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "வவுனியா மாவட்டத்தில் வாழ்கின்ற இடம்பெயர்ந்த மக்களுக்கும், காணியற்ற மக்களுக்கும் புதிதாக திருமணம் முடித்து காணிகள் அற்ற குடும்பங்களினதும் நன்மை கருதி அவர்களுக்கான ஒரு தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கையினை தேசியமக்கள் சக்தி அரசு எடுத்துள்ளது.

அந்தவகையில் கடந்த 2012 ஆம் ஆண்டில் வவுனியா மாவட்டத்தில் கூகுள் வரைபடத்தின் மூலம் வனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட அனைத்து காணிகளையும் விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

செம்மணிக்கு அநுர அரசாங்கமே நீதியை நிலைநாட்டும்.. அமைச்சர் சந்திரசேகர்

செம்மணிக்கு அநுர அரசாங்கமே நீதியை நிலைநாட்டும்.. அமைச்சர் சந்திரசேகர்

கூகுள் வரைபடம் 

குறிப்பாக இந்த மாவட்டத்தில் அண்ணளவாக 25 ஆயிரம் ஏக்கர் காணிகள் அவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலும் வனவளத்திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 52 ஆயிரம் ஏக்கர் காணிகள் உள்ளது.

அவை அனைத்தையும் தேசியமக்கள் சக்தி அரசாங்கம் விரைவில் விடுவிக்கவுள்ளது. அந்த காணிகளை அதன் உரிமையாளர்களுக்கும், காணிகள் அற்ற மக்களுக்கும் வழங்குவதற்கான துரித நடவடிக்கையினை நாம் மேற்கொண்டுள்ளோம். அத்துடன் வவுனியாவில் 849 குளங்கள் உள்ளது. அதில் 221 குளங்கள் வனவள திணைக்களத்தின் எலைக்குள் அமைந்துள்ளது.

இவற்றில் தற்போது 44 குளங்களை உடனடியாக விடுவித்து அவற்றை மீளவும் புணர்நிர்மானம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.

யாழில் தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் ஏற்பட்ட குழப்பம்! பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சிறீதரன்

யாழில் தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் ஏற்பட்ட குழப்பம்! பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சிறீதரன்

 780 மில்லியன் ரூபாய் 

அத்துடன் காடுமண்டி காணப்படுகின்ற ஏனைய 149 குளங்களை மீட்டு அவற்றை சுத்தப்படுத்தி மக்கள் பாவனைக்கு விடுவிப்பதற்கான நடவடிக்கை விரைவாக முன்னெடுக்கப்படும். இந்த வருடத்திற்குள் அந்த பணிகள் ஆரம்பிக்கப்படும். இந்த மாவட்டத்தில் ஆறு பெரிய நீர்ப்பாசன குளங்கள் உள்ளன.

அவற்றை புணரமைப்பதற்காக 780 மில்லியன் ரூபாய் தேவையாகவுள்ளது. அந்த நிதியை அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வனவளத் திணைக்களத்தால் கையகப்படுத்தப்படட காணிகள் - குளங்களை விடுவிக்க நடவடிக்கை | Forest Seized Lands Tanks To Be Released Vavuniya

அத்துடன் காணி விடுவிப்பின் முதற்கட்டமாக நெடுங்கேணியில் வனவளத்திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் விடுவிக்கப்படவேண்டிய இடங்களை அடையாளப்படுத்தும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தோம்.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர், வனவளதிணைக்கள அதிகாரிகள் பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்வரும் காலங்களில் வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக உலக வங்கியானது ஒரு பில்லியன் டொலர் நிதியை வழங்கவுள்ளது. இதன் மூலம் வடகிழக்கு மக்களின் பொருளாதாரத்தை வளம்பெறசெய்து அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவோம்" எனத் தெரிவித்தார்.

வனவளத் திணைக்களத்தால் கையகப்படுத்தப்படட காணிகள் - குளங்களை விடுவிக்க நடவடிக்கை | Forest Seized Lands Tanks To Be Released Vavuniya   

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்: பிரித்தானியாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்: பிரித்தானியாவில் இருந்து வந்த கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US