குடும்பத் தகராறில் கணவர் செய்த மோசமான செயல் - கதவை திறந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
இறக்குவானை பொலிஸ் பிரிவின் கண்டகும்புரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(25.09.2026) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கண்டகும்புரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டடையடத்து இறக்குவானை பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கணவர் செய்த மோசமான செயல்
இவ்வாறு உயிரிழந்தவர், கண்டகும்புரா பகுதியை சேர்ந்த 39 வயதுடைய பெண் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, தடியால் தாக்கி, கொலைச் செய்யப்பட்டுள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், மனைவியின் உயிரை பறித்த கணவர்,பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இறக்குவானை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் கொடுத்த இறுதி வாய்ப்பு - ஊடகங்கள் முன் ட்ரம்ப் கொடுத்த பதில்