தியாகச்சுடர் திலீபனின் நினைவு நாள்: தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் சிறிநாத் வலியுறுத்தல்
தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும் என்ற செய்தியை இந்த முழு உலகுக்கும் கொண்டு செல்கின்ற, இளம் சமுதாயத்தின் கைகளில் கொடுக்க வேண்டிய இந்த நிகழ்வாக திலீபன் நிகழ்வு உண்மையிலே ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றமை தமிழ் சமூகத்திற்கு ஒரு முக்கிய செயற்பாடாகும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று(26.09.2026) காந்தி பூங்காவில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன் மற்றும் டாக்டர் இ.சிறிநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, முன்னாள் மாநகர முதல்வர் சரவணபவன், மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அ.அமலநாயகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றுள்ளன.
திலீபனின் தியாகம்
இதன்போது இளையதம்பி சிறிநாத் கருத்து தெரிவிக்கையில்,
வரலாற்றில் தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் பல்வேறு வடிவங்களில் தங்களுடைய போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள்.

அந்த வகையில், அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு, தமிழ் மக்களுக்காக தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகச்சுடர் திலீபனின் நினைவு நாள், வருங்கால சந்ததியினருக்கு முக்கியமான நாளாகப் பார்க்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்ட விடயங்களை இதுபோன்ற நினைவு நாட்கள் நினைவுபடுத்துகின்றன. தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதுடன், சமகாலச் சூழ்நிலைகளிலும் பல்வேறு வடிவங்களில் இந்த ஒடுக்குமுறை இடம்பெற்று வருகின்றது.
தியாகிகளின் நினைவு தினம் அனுஷ்டிப்பு
தமிழ் இனத்தின் உரிமைகளுக்காக சாத்வீக வழியிலும், ஆயுதப் போராட்ட வழியிலும் பல்வேறு வடிவங்களில் போராடியவர்களின் தியாகங்களை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்களில் ஒருவராகவும், சாத்வீக ரீதியில் உண்ணாவிரதப் போராட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் போராட்டத்தை சர்வதேச நாடுகளுக்கும் எடுத்துச் சென்றவராகவும் தியாகச்சுடர் திலீபன் திகழ்கின்றார்.

எனவே, அவரது நினைவுகளை நாம் தொடர்ந்தும் எடுத்துரைக்க வேண்டும். தமிழ் மக்களுக்கான ஜனநாயக நடைமுறைகள் நசுக்கப்படுகின்ற இந்தக் காலகட்டத்தில், அவர்களுடைய அடிப்படையான நிலம், மொழி மற்றும் கலாச்சார உரிமைகள் பல்வேறு படிமுறைகளில் நசுக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில், அரசாங்கத்திற்கு எதிராகவும், எங்களுடைய உரிமைகளுக்காகவும் ஜனநாயக ரீதியில் போராட வேண்டிய சந்தர்ப்பத்தில் நாம் இருக்கின்றோம் என்றார்.
தமிழீழத்தை அங்கீகரிக்கத் தயாராக இருந்த நாடு! முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வெளியிட்டிருக்கும் கருத்து..
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri