திரையிடலுக்கு தயாராகும் போராட்டம் – கனடா வரும் மிஷ்கின்
ராஜ் சிவராஜ் எழுதி இயக்கியுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்தின் கனடா திரையிடல்களை முன்னிட்டு, பிரபல திரைப்பட இயக்குநர் மிஷ்கின் கனடாவுக்கு வருகை தரவுள்ளார்.
‘போராட்டம்’ திரைப்படத்தின் விசேட VIP முன்னோட்டக் காட்சிகள் செப்டெம்பர் 27ஆம் திகதி முதல் கனடாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளன.
விசேட திரையிடல்
இந்த விசேட திரையிடல்களில் மிஷ்கினும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் VIP முன்னோட்டக் காட்சி செப்டெம்பர் 27ஆம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு York Cinemas இல் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, செப்டெம்பர் 28ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு மொன்றியலில் உள்ள Ciné Starz Côte-des-Neiges திரையரங்கிலும், செப்டெம்பர் 29ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு ஒட்டாவாவின் Orleans திரையரங்கிலும் VIP முன்னோட்டக் காட்சிகள் இடம்பெறவுள்ளன.
போராட்டம்
இதற்கிடையில், திரைப்படத்தின் வழமையான திரையிடல்கள் ஒக்டோபர் 2ஆம் திகதி இரவு 7.00 மணிக்கு York Cinemas மற்றும் ஒக்டோபர் 3ஆம் திகதி பிற்பகல் 1.00 மணிக்கு Woodside Cinemas ஆகிய திரையரங்குகளில் நடைபெறவுள்ளன.

‘போராட்டம்’ திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
திரைப்படத்தை பாஸ்கரன் கந்தையா வழங்கியுள்ளதுடன், IBC Tamil Productions மற்றும் BlackBoard ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு பணிகளை முன்னெடுத்துள்ளன.
கனடாவில் நடைபெறும் இத்திரையிடல்களுக்கான நுழைவுச்சீட்டுகள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு +1 (416) 615-4646 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளலாம்.
நான் ஈழத் தமிழ் பெண்..! சமூகவலைத்தளங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ள மைத்ரேயி ராமகிருஷ்ணனின் ஒற்றைவார்த்தை
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan