நான் ஈழத் தமிழ் பெண்..! சமூகவலைத்தளங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ள மைத்ரேயி ராமகிருஷ்ணனின் ஒற்றைவார்த்தை

Sri Lankan Tamils Tamils Canada Actress Social Media
By Shadhu Shanker Sep 23, 2026 03:25 PM GMT
Report

தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படும் பெயர்களில் ஒன்றாக மைத்ரேயி ராமகிருஷ்ணன் என்ற பெண்ணின் பெயர் மாறியுள்ளது.

இலங்கைத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட கனேடிய நடிகையான மைத்ரேயி ராமகிருஷ்ணன், தனது அடையாளம் தொடர்பில் தெரிவித்த கருத்துகளே தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது எனலாம்.

யார் இந்த மைத்ரேயி ராமகிருஷ்ணன்

மைத்ரேயி ராமகிருஷ்ணன் கனடாவில் பிறந்த ஈழத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட ஒரு நடிகையாவார்.

நெட்பிலிக்ஸின் இன் பிரபலமான நகைச்சுவைத் தொடரான Never Have I Ever இல் தேவி விஸ்வகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் மைத்ரேயி ராமகிருஷ்ணன் கவனம் பெற்றார்.

2001ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் திகதி கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள மிசிசாகா நகரில் பிறந்த இவர், இலங்கை உள்நாட்டுப் போரின் பின்னணியில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது.

நான் ஈழத் தமிழ் பெண்..! சமூகவலைத்தளங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ள மைத்ரேயி ராமகிருஷ்ணனின் ஒற்றைவார்த்தை | Maitreyi Ramakrishnan S Current Issue Now

சுமார் 15,000 பேரை உள்ளடக்கிய தேர்வில் தெரிவுசெய்யப்பட்டு, Never Have I Ever தொடரின் முதன்மைக் கதாபாத்திரத்தைப் பெற்றதாக அவரது திரைப்பயணம் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கின்றன.திரைப்படங்கள் மற்றும் குரல் நடிப்பிலும் அவர் பங்களித்துள்ளார்.

குறிப்பாக, Pixar நிறுவனத்தின் Turning Red திரைப்படத்தில் குரல் கலைஞராகப் பணியாற்றியுள்ளார்.

இந்தநிலையில், மைத்ரேயி ராமகிருஷ்ணன் வழங்கியதாகக் கூறப்படும் நேர்காணல்களில், தனது இன மற்றும் கலாச்சார அடையாளம் குறித்து வெளிப்படையாகப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தன்னை ஈழத் தமிழ் பெண்ணாக அடையாளப்படுத்திக் கொள்வதில் பெருமை கொள்வதாக அவர் நேர்காணலொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழ் பெண்

மேலும், தனது குடும்பம் இலங்கையைச் சேர்ந்தது என்றாலும், தன்னை வெறுமனே “இலங்கையர்” என அடையாளப்படுத்துவதற்குப் பதிலாக, தன்னை ஈழத் தமிழர் என்று முன்னிறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று, Best of the Best திரைப்படத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு வசனத்தை மாற்றுமாறு அவர் கோரியதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.

அந்த வசனத்தில் இடம்பெற்ற “தமிழ் இலங்கை பெண்” என்பதற்குப் பதிலாக, “நான் தமிழ், எனது குடும்பம் இலங்கையைச் சேர்ந்தது” என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில் மாற்றம் செய்யுமாறு கோரியதாகக் கூறப்படுகிறது.

இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால், ஒருவர் தனது குடும்ப வரலாறு, இன அடையாளம் மற்றும் கலாச்சாரப் பின்னணியை எவ்வாறு வெளிப்படுத்த விரும்புகிறார் என்பதேயாகும்.

நான் ஈழத் தமிழ் பெண்..! சமூகவலைத்தளங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ள மைத்ரேயி ராமகிருஷ்ணனின் ஒற்றைவார்த்தை | Maitreyi Ramakrishnan S Current Issue Now

மைத்ரேயியின் கருத்துகள் வெளியாகியதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான எதிர்மறையான பதிவுகள் பதிவாகி வருகின்றன. சிலர் அவரது அடையாள நிலைப்பாட்டை விமர்சிக்கின்றனர்.

குறிப்பாக, “இலங்கைப் பூர்வீகத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னை இலங்கையர் அல்ல எனக் குறிப்பிடுவது” தொடர்பில் எதிர்ப்புக் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், புலம்பெயர் ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட சிலர் அவரது சுய அடையாள உரிமைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் பார்வையில், உள்நாட்டுப் போர், இடம்பெயர்வு மற்றும் குடும்ப வரலாறு போன்ற காரணிகள் ஒருவரின் அடையாள உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அவரது கருத்து தனியுரிமை சம்மந்தப்பட்டது என்றும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

விவாதமாக மாறிய விடயம்

எனவே, மைத்ரேயி தன்னை ஈழத் தமிழ் பெண்ணாக அடையாளப்படுத்திக் கொள்வது அவரது தனிப்பட்ட உரிமை என அவர்கள் வாதிடுகின்றனர்.

மைத்ரேயியின் கருத்துகளைத் தொடர்ந்து, Best of the Best திரைப்படம் தொடர்பில் இணையத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, IMDb தளத்தில் திரைப்படத்துக்கு எதிராக திட்டமிட்ட மதிப்பீடுகள் வழங்கப்பட்டதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனினும், திரைப்படத்தின் மதிப்பீடுகள் திட்டமிட்டு குறைக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கு நம்பகமான தரவுகள் மற்றும் சுயாதீனமான ஆதாரங்கள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை. மற்றும் படக்குழுவினரும் இது தொடர்பான எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை.

அதேவேளை, சமூக வலைத்தளங்களில் மைத்ரேயிக்கு எதிராக அவதூறான பதிவுகள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரது சமூகவலைத்தளங்களில் தவறான பதிவுகளும் ஈழத்தமிழர்களை இழிவாக பேசியும் சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நான் ஈழத் தமிழ் பெண்..! சமூகவலைத்தளங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ள மைத்ரேயி ராமகிருஷ்ணனின் ஒற்றைவார்த்தை | Maitreyi Ramakrishnan S Current Issue Now

மைத்ரேயி ராமகிருஷ்ணனைச் சுற்றி எழுந்துள்ள விவாதம், அவரது திரைப்படப் பணியை மட்டும் மையமாகக் கொண்டதாகத் தெரியவில்லை.

இது புலம்பெயர் தமிழர்களின் அடையாளம், இலங்கை உள்நாட்டுப் போரின் வரலாறு, குடும்ப நினைவுகள் மற்றும் சுய அடையாள உரிமை போன்ற பல்வேறு விடயங்களை பாதிக்கின்றது எனலாம்.

இலங்கையில் வாழும் தமிழர்களின் அனுபவங்களும், வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழ் புலம்பெயர் சமூகங்களின் அனுபவங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால், ஒருவரின் அடையாளக் கருத்து தொடர்பில் விவாதிக்கும்போது, வரலாற்றுப் பின்னணியையும் தனிப்பட்ட அனுபவங்களையும் கருத்தில் கொள்வது முக்கியமானதாகும்.

அதேநேரம், விமர்சனங்கள் முன்வைக்கப்படும் விதமும் கவனிக்கப்பட வேண்டியது அவசியம். உலகளவில் அறியப்படும் ஒரு நடிகை தனது ஈழத் தமிழ் பூர்வீகத்தை வெளிப்படையாகப் பேசும்போது, அது புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு முக்கியமானதாக அமையக்கூடும்.

அதேவேளை, அவரது கருத்துகளை ஏற்றுக்கொள்வதா அல்லது விமர்சிப்பதா என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட பார்வையைப் பொறுத்தது. ஆனால், இந்த விவாதத்தில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, ஒருவரின் அடையாளத்தைப் புரிந்துகொள்வதற்கு அவரது குடும்ப வரலாறு, கலாச்சார வேர்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களை மதிப்பிடுவது அவசியம் என்பதேயாகும்.

அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு

மைத்ரேயி ராமகிருஷ்ணனைச் சுற்றியுள்ள சர்ச்சை, ஒரு திரைப்பட நடிகையின் கருத்தாகத் தொடங்கி, அடையாளம் மற்றும் வரலாறு குறித்த பரந்த உரையாடலாக மாறியுள்ளதாக சமூக வலைத்தளப் பதிவுகள் காட்டுகின்றன.

ஒரு பெண் தனது கருத்தையும், தனது இன மற்றும் கலாசார அடையாளத்தையும் வெளிப்படையாகத் தெரிவிப்பதற்குக் கூட இன்றும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டிய நிலை தொடர்கிறதா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

குறிப்பாக, ஈழத் தமிழர்களின் வரலாற்று நினைவுகளுடன் தொடர்புடைய மாவீரர் நாள் உள்ளிட்ட நினைவு நிகழ்வுகளிலும், புலம்பெயர் ஈழத் தமிழர்கள் தங்களது உணர்வுகளையும் கருத்துகளையும் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களிலும், இதுபோன்ற பதிவுகள் மற்றும் அதற்கு எதிரான கடுமையான எதிர்வினைகளை தொடர்ந்தும் காணக்கூடியதாக உள்ளது.

நான் ஈழத் தமிழ் பெண்..! சமூகவலைத்தளங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ள மைத்ரேயி ராமகிருஷ்ணனின் ஒற்றைவார்த்தை | Maitreyi Ramakrishnan S Current Issue Now

போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், ஈழத் தமிழர்களின் அடையாளம், அவர்களின் வரலாற்று நினைவுகள் மற்றும் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் தொடர்பில் சமூகத்தில் இன்னும் முரண்பாடுகளும் விவாதங்களும் நீடித்து வருகின்றன.

இந்நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இனவாதத்திற்கு இடமளிக்காத ஆட்சியை முன்னெடுப்பதாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், அவரது ஆட்சிக்காலத்திலும் இன அடையாளத்தை மையமாகக் கொண்ட இவ்வாறான சமூக ஊடக எதிர்வினைகளும் சர்ச்சைகளும் தொடர்வது கவனத்திற்கு உரியதாக உள்ளது. இதனால், இனவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைக்கும் அரசாங்கம், சமூக மட்டத்தில் தொடர்ந்தும் வெளிப்படும் இவ்வாறான இன அடையாள அடிப்படையிலான எதிர்வினைகளை எவ்வாறு கையாள்கிறது? என்ற கேள்வியும் தற்போது எழுகிறது.

ஒருவரின் கருத்துடன் உடன்படாமல் இருப்பது ஜனநாயகத்தில் இயல்பான விடயமாக இருக்கலாம்.

ஆனால், கருத்து வேறுபாடு தனிப்பட்ட தாக்குதலாகவும், இன அடிப்படையிலான அவமதிப்பாகவும் மாறும்போது, கருத்துரிமை மற்றும் சமூக பொறுப்பு தொடர்பான கேள்விகள் மீண்டும் முன்னிலைக்கு வருகின்றன என்பதே தற்போதைய நிலைப்பாடு...

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Shadhu Shanker அவரால் எழுதப்பட்டு, 23 September, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US