செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்: பிரித்தானியாவில் இருந்து வந்த கோரிக்கை
செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தானியாவின், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டேம் சியோபைன் மெக்டோனா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈழத்தமிழினம் அனுபவித்து வந்த ஒரு கொடூரமான துன்பத்தின் சாட்சியமாக வெளிப்பட்டு நிற்கும் செம்மணி சித்துபாத்தி புதைகுழிகள் இப்போது மிகப்பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இலங்கையில் இடம்பெற்றது என்ற குற்றச்சாட்டை ஈழத்தமிழர்தரப்பும் சில மனித உரிமைகள் அமைப்புகளும் குற்றம் சாட்டி வரும் நிலையில் அதனை ஆதாரப்படுத்தும் ஒரு மிகப்பெரும் சாட்சியமாக மண்ணுக்குள் இருந்து மனிதக்கூடுகள் வெளிப்பட்டுக்கொட்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் மீளவும் ஒரு சர்வதேச அழுத்ததிற்கு இலங்கை அரசு தள்ளப்படபோகிறது.
அனுமானங்களை உண்மையாக்கும் வகையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வருகை அதுபோல பிரித்தானியாவில் இருந்தும் ஒரு செய்தி வெளிப்பட்டுள்ளது.
அதாவது கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தானியாவின், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டேம் சியோபைன் மெக்டோனா கோரியுள்ளார்.
இந்த நிலையில் இலங்கையில் ஏற்கனவே அகழப்பட்ட புதைகுழிகள் கிடப்பில் போடப்பட்டது போல் அல்லாமல் இந்த விவகாரம் இன்னுமொரு தளத்தில் ஈழத்தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான ஒரு சாட்டயமாக பதியப்போகிறது என்பது தொடர்பில் ஆராய்கிறது இன்றைய அதிர்வு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
