அம்பாறையில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஐவருக்கு விளக்கமறியல்
அம்பாறையில் வீடொன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் வியாழக்கிழமை (03.10.2024) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (27.09.2024) இரவு புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சிலர் வீடொன்றில் புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
விசாரணை
கைதான ஐந்து சந்தேக நபர்களையும் கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எல். நதீர் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய வேளை, சந்தேக நபர்களை எதிர்வரும் திங்கட்கிழமை (30) வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், கல்முனை நீதிவான் நீதிமன்றில் நேற்று முன்னிலையான சந்தேகநபர்களை எதிர்வரும் வியாழக்கிழமை (3) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 10 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
