தமது செலவுகளை வெளிப்படுத்தியுள்ள ஒரேயொரு ஜனாதிபதி வேட்பாளர்
ஜனாதிபதித் தேர்தல் 2024இல் போட்டியிட்ட ஒரு சுயேட்சை வேட்பாளர் மட்டுமே தனது பிரசார நிதியை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேசமயம், எந்த பெரிய கட்சியும் செப்டம்பர் இறுதிக்குள் தங்கள் தேர்தல் செலவுகளை வெளியிடவில்லை.
இந்தநிலையில், செலவுகளை அறிவிப்பதற்கான 21 நாட்களில் ஒன்பது நாட்கள் நேற்றுடன் (30.09.2024) முடிவடைந்துள்ளன.
கால அவகாசம்
கண்ணாடி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் எம். பிரேமசிறி மானகே மாத்திரமே தமது செலவுகளை அறிவித்துள்ளார்.
2023 ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட மற்றும் 2024 ஜனாதிபதித் தேர்தலின் போது முதன்முறையாக பரீட்சிக்கப்பட்ட தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி, ஒரு வேட்பாளர் அல்லது அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி, தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் தங்கள் பிரசார நிதியை அறிவிக்க வேண்டும்.
பிரசார நிதி
இதன்படி, செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நாளிலிருந்து, ஒவ்வொரு வேட்பாளரும் ஒக்டோபர் 12ஆம் திகதிக்குள் தங்கள் பிரசார நிதியை அறிவிக்க வேண்டும்.
முன்னதாக, இலங்கையின் தேர்தல் திணைக்களம், நிர்ணயித்த செலவின வரம்பின்படி, நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு வேட்பாளர் அல்லது கட்சி 109 வீதம் மொத்தம் 1.8 பில்லியன் ரூபாயை மட்டுமே செலவிட முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
