வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம் முன்னெடுப்பு
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (01) காலை 10 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க அலுவலகம் மற்றும் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றது.
இதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டு குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
செய்தி - யது, எரிமலை
மட்டக்களப்பு
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இன்று காலை நடைபெற்ற நிலையில் மட்டக்களப்பு நகரில் சிறுவர்கள் பங்குகொண்ட கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்பு சான்றிதழ்தான் பதில் என்றால் கொலைசெய்தவன் யார்?, பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே இறந்துகொண்டு இருக்கின்றோம், கையளிக்கப்பட்ட சகோதரங்கள் எங்கே? என்கின்ற வாசகங்கள் அடங்கிய பதகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பை முன்னெடுத்துள்ளனர்.
இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் மற்றும் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்தி - குமார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










படம் இல்லை ரூ. 100 கோடிக்கு மேலான செலவில் அட்லீ இயக்கும் விளம்பரம்... பிரம்மாண்டத்தின் உச்சம் Cineulagam

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri
