முல்லைத்தீவில் பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்பட்ட சமூக சேவை நிறுத்தப்பட்டதால் மக்கள் பாதிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு பாதுகாப்பு படைப்பிரிவினால் இலவசமாக வழங்கப்பட்டு வந்த குடிதண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கேப்பாபிலவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்து பொதுமக்களுக்காக குடிதண்ணீர் விநியோகம் ஒன்று கடந்த காலங்களில் இருந்து செயற்பட்டு வந்துள்ளது.
குறிப்பாக கேப்பாபிலவு மக்கள், கேப்பாபிலவு மாதிரி கிராம மக்கள், இராணுவத்தினர், பயணிகள், பேருந்து ஓட்டுனர்கள் உள்ளிட்டவர்கள் இந்த குடிதண்ணீரை பெற்றுவந்துள்ளனர்.
பாரிய சிரமங்கள்
இந்தநிலையில், கடந்த சில நாட்களாக இந்த குடிதண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், குடிதண்ணீரை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |