பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
புதிய இணைப்பு
எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து கட்டணத்தை 04 வீதத்தால் குறைக்க முடியும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி 28 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 25 ரூபாவாக குறைக்க முடியும் என அதன் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கட்டண திருத்தத்தின் போது ஒட்டோ டீசலின் விலை 11 ரூபாவினாலும் இன்றைய நிலவரப்படி 24 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதால் பேருந்து கட்டணத்தைக் குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தைக் குறைக்கும் சாத்தியம் இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கையில் பேருந்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் அதன் நன்மைகளை மக்களுக்கு வழங்கவுள்ளதாக, சங்கத்தின் பொது செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணம்
அதற்கமைய பேருந்து கட்டணத்தை 4 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டதாக இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருட்களின் விலையை குறைப்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று அறிவித்தது.
எரிபொருள் விலை
அதற்கமைவாக ஒரு லீற்றர் டீசல் 24 ரூபாவினாலும், ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 33 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 92 ஒரு லீற்றர் பெற்றோல் 21 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டேன் 95 பெற்றோலின் விலையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
