லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக இருந்த முதித பீரிஸ் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் பதவி விலகியிருந்தார்.
பதவி விலகிய முதித பீரிஸ்
கடந்த 26ஆம் திகதி கடிதம் மூலம் தனது பதவி விலகலை அவர் அறிவித்திருந்தார்.

லிட்ரோ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக கடமையாற்றியிருந்த முதித பீரிஸ் கடந்த 2022 ஜூன் 13ஆம் திகதி லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார்.
புதிய தலைவர்
இந்தநிலையில், இரண்டு வருடங்களுக்குப் பிறகு கடந்த வாரம் அவர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.
அதனையடுத்தே குறித்த பதவிக்கு சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை எரிவாயு தட்டுப்பாடு இருக்காது என்று பதவி விலகும் போது முதித பீரிஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது: பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri