நாட்டின் முக்கிய நகரங்களில் நெருக்கடி! பணிக்கு வராதோருக்கு கடும் எச்சரிக்கை - வெளியான அதிரடி அறிவிப்பு
பணிக்கு சமூகமளிக்காத மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், புதிதாக நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
கடும் ஒழுக்காற்று நடவடிக்கை
இதனை தொடர்ந்து பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்களுக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய நிறுவனங்களின் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும் 12000 இற்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (10.03.2026) பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் முக்கிய நகரங்கள் பலவற்றில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம், அனுராதபுரம் ஆகிய பகுதிகள் பாதிப்பை எதிர்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கலைக்கப்பட்ட மின்சார சபை
ஐந்து தசாப்த கால வரலாற்றைக் கொண்ட இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாகக் கலைக்கப்பட்டு, 6 நிறுவனங்களாக பிரிக்கப்பட்டதை எதிர்த்து மின்சார சபையின் 24 தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
அரசாங்கத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், கடந்த 8ஆம் திகதி நள்ளிரவுடன் இலங்கை மின்சார சபை என்ற கட்டமைப்பு முடிவுக்கு வந்தது.
கடந்த 9ஆம் திகதி முதல் மின்சார சபை 6 வெவ்வேறு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam