உலக நாடுகளுக்கே இறுதி நிமிடம் : விளாடிமிர் புடினின் பதறல் - சமையலறை வரை ஈரான் போர்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கை மற்றும் அதற்குப் பதிலடியாக பிராந்தியம் முழுவதும் ஈரான் மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலைமை தற்போது உலக நாடுகளின் சமையலறை வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
இதேவேளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள், உலக எரிசக்தி சந்தையை பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
அடுத்த சில வாரங்களில் ஹார்முஸ் நீரிணை வழியாக நடக்கும் எண்ணெய் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படலாம். இந்தப் போக்குவரத்து முடக்கம் உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று புடின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி....