பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் மரணம்: பொலிஸார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு
போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரிவத்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான இஷார ஹர்ஷ குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பொலிஸாரின் கடுமையான தாக்குதல் காரணமாகவே சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இன்று காலை சந்தேகநபரைப் பார்ப்பதற்காக உறவினர்கள் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற போது, பொலிஸார் அவரைத் தாக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பின்னர் உறவினர்களின் தீவிர கோரிக்கைக்கு இணங்க சந்தேகநபரை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்தபோதிலும், அந்த நேரத்திலேயே அவர் உயிரிழந்திருந்ததாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சோதனையின் போது ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தினால் பிரேத பரிசோதனை நடத்துவதற்கு தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இது தவிர, சம்பவம் குறித்து பரந்த அளவிலான விசாரணையை நடத்துவதற்காக ஹோமாகம உதவி பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் சிறப்பு ஆரம்பக்கட்ட விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிரக மாற்றங்களால் நவம்பரில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
ஈரான் மீது மீண்டும் தாக்குதலா? ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri