ஒரே இரவில் 4 கடைகள் உடைப்பு - சிசிடிவியில் சிக்கிய சந்தேகநபர்கள்
ஹட்டன் நகரில் ஒரே இரவில் நான்கு வர்த்தக நிலையங்களை உடைத்து, பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று(25.10.2026) இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் நகரின் பக்க வீதியில் அமைந்துள்ள மூன்று தங்க ஆபரண உற்பத்தி நிலையங்களும், ஒரு சில்லறை வர்த்தக நிலையமுமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன.
நான்கு கடைகள் உடைப்பு
குறித்த கொள்ளையர், வர்த்தக நிலையங்களின் கதவுகளில் பொருத்தப்பட்டிருந்த பூட்டுகளை ஆயுதமொன்றினால் அறுத்து உடைத்து உள்ளே நுழைந்துள்ளதாகவும் அங்கிருந்த சிசிரிவி கமராக்களை சுத்தியலால் அடித்து உடைத்தும், அவற்றின் திசைகளை மாற்றியும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு கொள்ளையர் செயற்படும் காட்சிகள், இரண்டு வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பு கமரா பதிவுகளில் சிக்கியுள்ளன.
விசாரணைகள் தீவிரம்
இந்தச் சம்பவங்கள் தொடர்பில், கொள்ளையிடப்பட்ட நான்கு வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.
அண்மைக் காலமாக ஹட்டன் நகரில் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் பல பதிவாகி வருகின்ற நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைக் கைது செய்வதற்காக ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




