அல்லைப்பிட்டியில் விசமிகள் மூட்டிய தீ : சிலர் வைத்தியாலையில் அனுமதிப்பு!
அல்லைப்பிட்டி அலுமினிய தொழிற்சாலை பகுதி காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ வைத்தமையால் வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை உருவானது.
பற்றி எரிந்த புதர்களால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம் வீதியின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் வீதியால் போக்குவரத்தில் ஈடுபட்ட மக்கள் சுவாசிக்க முடியாத நிலையும் ஏற்பட்டது.
மேலும் குறித்த புகை மூட்டத்தால் மோட்டார் சைக்கிளில் சென்ற சிலர் விபத்துக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
துரித நடவடிக்கை
இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளருக்கு அறியப்படுத்தியதை அடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்டதன் பிரகாரம் யாழ். மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு மாவட்ட மேலதிக அரச அதிபர் கை.சிவகரன் கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








