எல்லை தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்கள் - யாழ் கடற்றொழில் சமாசத்தின் கோரிக்கை
எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழில் படகுகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது கட்டுப்படுத்துங்கள் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் கடற்படையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
இன்று(24.07.2026) யாழ். மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்திய கடற்றொழிலாளர்கள்
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய கடற்றொழிலாளர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து எமது மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை முற்று முழுதாக அழித்துவிட்டு செல்கின்றனர்.
இந்திய கடற்றொழிலாளர்களின் இத்தகைய செயற்பாடு பல வருடங்களாக இடம்பெற்றுவரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த இந்திய அரசும் தமிழக அரசும் தவறிவிட்டது.

இந்திய தமிழக புதிய முதல்வராக விஜய் பொறுப்பேற்றதன் பின் அதிகளவிலான இந்திய கடற்றொழிலாளர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் தீவகக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய சட்டவிரோத கடற்றொழிலாளர்கள் எமது கடற்றொழிலாளர்கள் கடலில் வீசியிருந்த பல கோடி பெறுமதியான வலைகளை அறுத்து நாசம் செய்தனர்.
துப்பாக்கி பிரயோகம்
இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான வருகை எமது கடற்றொழிலாளர்களை வாழ்வாதார நீதியாக பாதிப்பது மட்டுமல்லாது கடற்றொழிலில் இருந்து வேறு தொழில்களுக்கு செல்லவும் நிர்ப்பந்தித்துள்ளது.
இலங்கை கடற்படையிடம் வினயமாக கேட்கிறோம். எல்லை தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்துங்கள் இல்லையேல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது அவர்களின் வருகையை கட்டுப்படுத்துங்கள்.

எங்களால் இனியும் பொறுமை காக்க முடியாது நாட்டின் ஜனாதிபதியையும் துறைசார் அமைச்சரையும் சந்தித்து எமது கோரிக்கையை தெளிவாக கூற இருக்கிறோம்.
சட்டத்தை நாங்கள் கையில் எடுக்க விரும்பவில்லை ஆகவே எமது கடற்பகுதியை பாதுகாக்கும் அதிகாரமும் கடமையும் கடற்படையிடம் உள்ள நிலையில் எல்லை தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கட்டுப்படுத்துங்கள். நாங்கள் பக்க பலமாக இருப்போம் என குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri