ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு நாளை நேரடிப் பேச்சு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் காலை 10 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
புதிய அரசமைப்பு, தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலேயே இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளன.
அத்துடன், புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து உதவிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியும் கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு கடந்த 15 ஆம் திகதி நடைபெறவிருந்தது.
எனினும், ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு ஐக்கிய மக்கள் சக்தியினர் நடத்திய
போராட்டத்தால் நாளை வரை இந்தப் பேச்சு பிற்போடப்பட்டது.
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam