கடற்றொழில் அனுமதி பத்திரம் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற அதிகாரிகள்: நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்து
மட்டக்களப்பில் கடற்றொழில் அனுமதி பத்திரம் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் சுருக்கு வலை பாவித்து சிறிய முரல் மீன் பிடிப்பதற்கான அனுமதி பத்திரம் வழங்குவதற்காக ஒரு படகு உரிமையாளரிடம் இருந்து 35 ஆயிரம் ரூபா வீதம் 20 படகு உரிமையாளர்களிடம் இருந்து சுமார் 7 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உத்தியோகத்தர்கள் வாங்கியுள்ளனர்.
எனவே கடற்றொழில் அமைச்சர் உடன் விசாரணை செய்து அந்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
கோரிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், கடற்றொழிலாளர்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் தமது வாழ்வாதாரத்துக்காக எரிபொருள் விலை ஏற்றத்தின் மத்தியில் கடற்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் அனுமதி பத்திரம் வழங்க பெரும் தொகை இலஞ்சமாக பணம் வாங்கிய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடற்றொழிலாளர்களின் நலன் கருதி அவர்களிடம் இலஞ்சப் பணம் வாங்கிய உத்தியோகத்தர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு கடற்றொழிலாளர்களின் பணத்தை மீண்டும் திருப்பி கொடுக்க வேண்டும்.
அத்துடன் பணம் இல்லாது அனுமதி பத்திரம் பெறமுடியாது உள்ள ஒரு சில கடற்றொழிலாளர்களுக்கும் இந்த அனுமதி பத்திரத்தை வழங்க வேண்டும் என்பதுடன் 70 ஆயிரம் கொடுத்து இதுவரை அனுமதி பத்திரம் வழங்காத அவருக்கு அனுமதி பத்திரத்தை வழங்கி அந்த பணத்தை மீள பெற்றுக் கொடுக்க வேண்டும் என அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.
மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் எம்.பி பதவியைத் துறந்து போட்டியிடத் தயார்..! நளின் பண்டார அதிரடி அறிவிப்பு
வெனிசுலா ஒப்பந்தம் போன்று... ஈரான் எண்ணெய் மொத்தம் அமெரிக்கா கைப்பற்றும்: ட்ரம்ப் விருப்பம் News Lankasri
செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan