மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் எம்.பி பதவியைத் துறந்து போட்டியிடத் தயார்..! நளின் பண்டார அதிரடி அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து 13 முதல் 14 ஆண்டுகள் மக்கள் பணியாற்றிய அனுபவம் தனக்கு இருப்பினும், எதிரணியில் இருந்து கொண்டு மக்களுக்குத் தேவையான பணிகளைத் திறம்படச் செய்ய முடியாது என்றும், அதற்கு ஆட்சி அதிகாரமே அவசியம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் பதவி
நாட்டின் மிகப்பெரிய முதலீட்டு மண்டலமான பிங்கிரிய பகுதியில் 1,000 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் பிரதி அமைச்சராகத் தான் ஆற்றிய பங்களிப்பை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தம்மிடம் வேலை செய்யக்கூடிய உண்மையான திறன் இருந்தபோதிலும், எதிர்க்கட்சியில் இருக்கும்போது அதிகார வரம்புகள் மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கின்றன என்று குறிப்பிட்ட அவர், அரசில் அதிகாரம் இருந்தால் மட்டுமே மக்களுக்கு முழுமையாகப் பணியாற்ற முடியும் என்றார்.
இதன் காரணமாக, மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வெறும் மாகாண சபை உறுப்பினராக இல்லாமல், முழுமையான அதிகாரமிக்க மாகாண முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றி மக்களுக்குச் சேவையாற்றுவதே தனது பிரதான இலக்கு என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.
நாமலுக்கு சாரதியாகக் கூட செல்வேன்..! ராஜபக்சர்களுக்காக குரல் கொடுத்த அர்ச்சுனா எம்.பியால் வெடித்த சர்ச்சை
you may like this video
வெனிசுலா ஒப்பந்தம் போன்று... ஈரான் எண்ணெய் மொத்தம் அமெரிக்கா கைப்பற்றும்: ட்ரம்ப் விருப்பம் News Lankasri