நாமலுக்கு சிறை ஒன்றும் புதிதல்ல..! நாட்களை எண்ணிக் காத்திருக்கும் மொட்டுக்கட்சி
நாமல் ராஜபக்சவிற்கு சிறை ஒன்றும் புதிய இடம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுனவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் நாமல் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் நாமல் ராஜபக்ச மூன்று தடவைகள் விளக்கமறையில் அடைக்கப்பட்டிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே அரசியல் செய்யும்போது இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவிற்கு பிணை
நாமல் ராஜபக்ச நல்ல தேக ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்கின்றார் என தெரிவித்துள்ளார். நாட்டில் சுயாதீனமான நீதிமன்ற கட்டமைப்பு ஒன்று இயங்கி வருவதாக நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்வரும் 18 ஆம் திகதி நாமல் ராஜபக்சவிற்கு பிணை கிடைக்கும் என நம்புவதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாமலின் சட்டத்தரணிகள் பிணை பெற்றுக் கொள்வது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் எம்.பி பதவியைத் துறந்து போட்டியிடத் தயார்..! நளின் பண்டார அதிரடி அறிவிப்பு