தலைமைப் பதவி மைத்திரிக்கு இல்லை : தடை உத்தரவை நீடித்த நீதிமன்றம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு(Maithripala Sirisena) விதிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை இந்த தடை நீடிக்கப்படுவதாக நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மைத்திரி மீதான தடை
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால்(Chandrika Kumaratunga) தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam