அதிகரித்து வரும் பொதுக் கடன் அளவுகள் குறித்து G - 24 உறுப்பினர்கள் கவலை
இலங்கை உட்பட, நாடுகளிடையே அதிகரித்து வரும் பொதுக் கடன் அளவுகள் குறித்து G -24 உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பல வளரும் நாடுகள் தாங்க முடியாத கடன் சுமைக்கு உட்பட்டுள்ளதாக G -24 குழுவின் உறுப்பினர்கள், சர்வதேச நாணய நிதிய மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் வோசிங்டன் வசந்தகால கூட்டங்களின் போது குறிப்பிட்டுள்ளனர்.
கடன் நெருக்கடி
நிதிக்கான அணுகல் குறைதல், இறுக்கமான வெளிப்புற நிதி நிலைமைகள், அதிக கடன் அளவுகள் மற்றும் பணவீக்கம் ஆகியவற்றால் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே வளரும் நாடுகளுக்கு கிடைக்கும் நிதியுதவியை அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கு G -24 உறுப்பினர்களைக் கொண்ட அரசுகளுக்கிடையேயான குழு அழைப்பு விடுத்துள்ளது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியம், குறுகிய கால நிதியளிப்பு கருவிகளை சீர்திருத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் G -24 குழுக்கூட்டத்தில் இலங்கையின் கடன் நெருக்கடி குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan