அதிகரிக்கும் பதற்றம் - இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் ஹிஸ்புல்லா
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலில் 14 இஸ்ரேல் இராணுவ வீரர்கள் காயமடைந்ததாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலானது இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பதிலடியாக நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது.
வான்வழித் தாக்குதல்
முன்னதாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 கமாண்டர்கள் உட்பட மூன்று ஹில்புல்லா போராளிகள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது.
இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப்படை வெளியிட்டிருந்த அறிக்கையில், "ராட்வான் படைகளின் மேற்கு பிராந்தியத்தின் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் பிரிவின் தளபதி, முஹம்மது ஹுசைன் ஷாஹோரி தெற்கு லெபனானில் உள்ள க்ஃபார் டூனினில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இவர் இஸ்ரேல் மீதான் ராக்கெட் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தாார். இவருக்கு பக்க பலமாக இருந்த ஹிஸ்புல்லாவின் ராக்கெட் மற்றும் ஏவுகணைப் பிரிவின் மற்றொரு தலைவரான மஹ்மூத் இப்ராஹிம் ஃபட்லல்லாவும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
மூன்றாவதாக ஹிஸ்புல்லாவின் கடலோர பாதுகாப்புப்படை பிரிவின் தளபதி இஸ்மாயில் யூசுப் பாஸ் இந்த ராக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |