கனடாவில் தொழில் புரிவோருக்கு ஏற்படவுள்ள சிக்கல் - வெளியான அதிர்ச்சி தகவல்
கனடாவில் எதிர்வரும் நான்கு ஆண்டு காலப் பகுதியில் சுமார் ஐயாயிரம் அரச ஊழியர்கள் பணிகளை இழக்க நேரிடும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விடயம் தொடர்பான யோசனை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை நிதி அமைச்சரும் பிரதிப் பிரதமருமான கிறிஸ்டியா ப்ரிலாண்ட் தெரிவித்துள்ளார்.
ஆட்குறைப்பு நடவடிக்கைகள்
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், செலவுகளை குறைக்கும் நோக்கில் இவ்வாறு ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பதவி விலகல்கள் மற்றும் ஓய்வு பெறுதல்கள் போன்ற சந்தர்ப்பங்களில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யாது ஆளணி வள எண்ணிக்கையை வரையறுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் 4.2 பில்லியன் டொலர்களை சேமிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 44 நிமிடங்கள் முன்

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
