இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடர்பில் ஈரான் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
இஸ்ரேலுக்கு (Israel) எதிரான தாக்குதலின் மூலம் அந்நாட்டின் மேலதிகாரத்தை நாம் சிதைத்துவிட்டதாக ஈரானிய (Iran) ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) தெரிவித்துள்ளார்.
ஈரான் இராணுவத்தின் வருடாந்த அணிவகுப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் சிறிய தாக்குதலை நடத்தினால் கூட ஈரானின் பதிலடி கடுமையானதாக இருக்கும்.
சர்வதேச கருத்துக்கள்
அத்துடன், இஸ்ரேலுடன் உறவுகளை சீராக்க முயன்ற இஸ்லாமிய நாடுகள் தோல்வியையே சந்தித்துள்ளன.
சர்வதேச மக்களின் கருத்துக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இஸ்ரேலுக்கு எதிராக உள்ளன.
பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இஸ்ரேலுடன் ஒப்பந்தங்களை செய்துகொள்வதற்குப் பதிலாக பலம் வாய்ந்த இஸ்லாமிய சக்திகளை நம்ப வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |