10 ஆண்டுகளின் பின்னர் இத்தாலிக்கு நேரடியாக சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்
இத்தாலியின் ரோம் நகருக்கு விசேட விமானம் ஒன்றை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இயக்கியுள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடங்கல்களால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், இந்த பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, UL 1213 என்ற விசேட விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இத்தாலியின் ரோம் பியுமிசினோ விமான நிலையத்திற்குப் புறப்பட்டுச் சென்றது.
Airbus விமானம்
இந்தப் பயணத்திற்காக Airbus A330-343 ரக விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய உலகளாவிய விமானப் போக்குவரத்து சிக்கல்களால் இடையில் தவித்த பயணிகளைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
கடந்த சில நாட்களாக பல்வேறு விமான நிறுவனங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், பெரும் சிரமத்திற்குள்ளான பயணிகள் தங்களது இலக்கை அடைய இந்த விசேட விமானம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ரோம் நகருக்கான தனது வழக்கமான விமானச் சேவைகளை 2016 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நிறுத்தியிருந்தது.
சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையில் இருந்து தேசிய விமானச் சேவையின் விமானம் ஒன்று இத்தாலியின் தலைநகருக்குப் பயணிப்பது இதுவே முதல் முறையாகும்.