ஈரானை கைப்பற்ற நினைத்தால்.. வளைகுடாவை படையெடுத்தவர்களின் இரத்தத்தால் ஓடச் செய்வோம்! விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
ஈரான் நாட்டின் தீவுகளை கைப்பற்ற செய்யும் முயற்சி எதுவாக இருந்தாலும் அதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாத கடுமையான பதிலை வழங்குவோம் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானிய தீவுகளின் நிலப்பரப்புக்கு எதிராக எந்தத் தாக்குதலும் நடத்தப்பட்டால், நாம் வைத்திருக்கும் அனைத்து கட்டுப்பாடுகளும் உடைந்து போகும் என்று அவர் சமூக வலைதளமான X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எச்சரிக்கை
மேலும் அவர், “அத்தகைய படையெடுப்பு நடந்தால் நாம் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பதிலடி கொடுப்போம் நாங்கள் அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிட்டு பாரசீக வளைகுடாவை ஈரானுக்கு எதிராக படையெடுத்தவர்களின் இரத்தத்தால் ஓடச் செய்வோம் என்றும் எச்சரித்துள்ளார்.
Homeland or Death!
— محمدباقر قالیباف | MB Ghalibaf (@mb_ghalibaf) March 12, 2026
Any aggression against soil of Iranian islands will shatter all restraint.
We will abandon all restraint and make the Persian Gulf run with the blood of invaders.
The blood of American soldiers is Trump's personal responsibility.
ஹார்முஸ் நீரிணையை கடந்த இந்திய கப்பல்கள் - மறுப்பு தெரிவித்துள்ள ஈரான்! மும்பை வந்தடைந்துள்ள மற்றுமொரு கப்பல்