பாதாள உலக குழுவினரை ஆட்டிப்படைப்பது ராஜபக்சர்களே..! காவடி ஊர்வலத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டம்
பாதாள உலகக் குழுவினரை பயன்படுத்தி நாட்டை சீரழிப்பவர்கள் ராஜபக்சர்களே. அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான ஆட்சியை மக்கள் வரவேற்று வருவதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெரஹராவின் போது நடைபெறவுள்ள பாதாள உலகக் கும்பல் பிரச்சினைகளுக்கும் ராஜபக்சர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
மக்களிடையே அரகலய போராட்டத்தைப் போன்ற ஒரு மதக் கலவரத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. ஆனால் யார் எப்படி செயற்படுகின்றனர் என்பதை புரிந்துகொள்ளும் அளவிற்கு மக்கள் தற்போது விழிப்புணர்வுடன் இருக்கின்றார்கள்.
கலவரத்தை ஏற்படுத்தி நாட்டை கைப்பற்றலாம் என்ற எண்ணமே இத்தகைய குழப்பங்களுக்கு அடித்தளமாக இருக்கின்றது. கஞ்சிபாணி இம்ரானை ஆட்டிப்படைத்து வருபவர்கள் ராஜபக்சர்களே என்றார்.