பிரித்தானியா அறிமுகம் செய்துள்ள புதிய விசா திட்டம் - புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சித் தகவல்
பிரித்தானியாவில் (United Kingdom) குடியேற்ற நடைமுறையை நவீனமயமாக்கும் மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
ஈ-விசா (e Visa) அறிமுகமானது மோசடி, இழப்பு மற்றும் ஆவணங்களை துஷ்பிரயோகம் செய்யும் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தும் என்று அரசாங்கம் நம்புகிறது.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஈ-விசா ( e Visa) குறித்து மேலும் தெரியவருகையில்,
அனைவருக்கும் ஈ-விசா
குடியேற்ற ஆவணங்களை கைவசம் கொண்டுள்ள தரப்பினருக்கு அவற்றை ஈ-விசாவுக்கு மாற்றும் நடவடிக்கை தொடர்பான செயல்முறையை உள்ளடக்கிய ஈ-மெயில் (E-mail) இன்று (17.4.2024) முதல் அனுப்பப்பட்டு வருகிறது.
இதன்படி, எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் பிரித்தானியாவில் (United Kingdom) உள்ள அனைவருக்கும் ஈ-விசா (e-Visa) வழங்கப்படுமென என்று உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த ஈ-மெயிலில் அனுப்பப்பட்டுள்ள பயோமெட்ரிக் குடியிருப்பு அனுமதி (Biometric Residence Permits - BRPs) எனும் இணையத்தளத்தில் கணக்கொன்றை உருவாக்குவதன் மூலம், பிரித்தானியாவில் உள்ளவர்களுக்கு ஈ-விசாவை பெற்றுக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியேற்றத்துக்கான சான்று
இதனை, பிரித்தானியாவி்ல் (United Kingdom) உள்ளவர்கள், தங்கள் குடியேற்றத்துக்கான சான்றாக பயன்படுத்த முடியுமென கூறப்பட்டுள்ளது.
மோசடி, இழப்பு மற்றும் ஆவணங்களை துஷ்பிரயோகம் செய்தல் ஆகிய சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதையும் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும் முதன்மையாக கொண்டு இந்த ஈ-விசா திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஈ-விசா மூலம், தற்போது பிரித்தானியாவில் (United Kingdom) உள்ளவர்களின் குடியேற்ற நிலைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam
