எகிப்தில் எரிபொருள் ஏற்றிச் சென்ற வாகனம் தீப்பற்றி விபத்து : 30 பேர் பலி
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில், பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று கவிழ்ந்து தீப்பற்றியதில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று 25ஆம் திகதி, கெய்ரோவின் கிசா மாகாணத்தில் உள்ள இம்பாபா மாவட்டத்தின் அல்-வராக் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணை
எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியின் நடுப்பகுதியில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்ததால் வெடிப்புடன் தீ பரவியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தீ விபத்தில் 27 வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்திற்கு 39 அவசர நோயாளர் காவு வண்டிகள் அனுப்பப்பட்டு, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்காக DNA மாதிரிகளைச் சேகரிக்குமாறு எகிப்தின் சட்ட மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.