ஈரான் அணுகுண்டு வீசினால் இஸ்ரேல் தப்புமா! அபாயத்தின் உச்சத்தில் மத்திய கிழக்கு
வளைகுடாவில் எந்த நிமிடமும் ஒரு யுத்தம் வெடிக்கலாம் என்று இருக்கின்ற நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் அணுஆயுதம் கொண்டு தாக்குவதற்கு சந்தர்ப்பம் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது.
ஈரானின் கைகளுக்கு அணுஆயுதம் வந்து சேர்ந்தால் நிச்சயம் இஸ்ரேலை ஈரான் தாக்கும் என்றே பலரும் அச்சம் வெளியிடுகின்றனர்.
ஒரு அணுகுண்டைத் தயாரிப்பதற்கு 42 கிலோகிராம் யுரேனியம் தேவைப்படும் என்று கூறப்படுகின்ற நிலையில் ஈரானிடம் தற்போது உள்ள 440 கிலோகிராம் யுரேனியத்தைக் கொண்டு ஈரானினால் எந்த நிமிடம் வேண்டுமானாலும் 10 அணுகுண்டுகளை தயாரிக்க முடியும் என போரியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்தப் பின்னணியில் தான் ஈரான் இஸ்ரேல் மீது அணுஆயதத் தாக்குதலை மேற்கொண்டால் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுகின்றது.
ஈரான் இஸ்ரேல் மீது அணுகுண்டுத் தாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும், இஸ்ரேல் தப்புமா, அமெரிக்கா போரில் தலையிடுமா, சீனா ஈரானுக்கு ஆதரவளிக்குமா, மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமா,அணு ஆயுதப் போரின் உலகளாவிய விளைவுகள் என்ன,இத்தகைய முக்கியக் கேள்விகளுக்கு உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் விரிவாகப் பார்க்கலாம்.