நாட்டில் அவசியமான பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படும்: மத்திய வங்கி ஆளுநர்
நாட்டின் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறாக இருந்தாலும் அவசியமான நிதி மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் தீர்க்கமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விரிவுரையொன்றில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுமக்களின் எதிர்ப்பைக் கருத்திற்கொண்டு அவசியமான கொள்கைகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது நாட்டின் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.
பொருளாதார தாக்கங்கள்
நாட்டின் தேவைக்கேற்ப வரி விகிதங்களை அதிகரித்தல் அல்லது குறைத்தல், வட்டி விகிதங்களை மாற்றுதல் மற்றும் மாற்று விகிதத்தில் தேவையான மாற்றங்களை அனுமதித்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான தீர்மானங்களால் மக்கள் எதிர்ப்புகளும் சமூக அமைதியின்மையும் ஏற்படக்கூடும் என்றாலும், அவற்றின் அவசியம் மற்றும் பொருளாதார தாக்கங்கள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் வலியுறுத்தினார்.
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan