சாலை மறியல் விவகாரம் - விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இலங்கைக்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் ஸெயித் ரே அல் ஹுசைன் வருகை தந்திருந்தபோது, கொழும்பு - துன்முல்லவில் உள்ள ஐ.நா. அலுவலகம் அருகே சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவருடைய குழுவினருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று(02.11.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு நீதவான் நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்போது, சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதவான், வழக்கை டிசம்பர் 7ஆம் திகதி விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.
வழக்கு ஒத்திவைப்பு
2016ஆம் ஆண்டில் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் இளவரசர் ஜெயித் அல் ஹுசைன் இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது, கொழும்பு, துன்முல்லவில் உள்ள ஐ.நா. அலுவலகத்தைச் சுற்றியுள்ள சாலைகளை மறித்து பொதுமக்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஒரு குழுவினருக்கு எதிராக குருந்துவத்தை பொலிஸ் மாநாட்டால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குடன் தொடர்புப்பட்ட மற்ற பிரதிவாதிகளாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான முகமது முஸம்மில், வீரகுமார திசநாயக்க, ஜயந்த சமரவீர, பியசிறி விஜேநாயக்க மற்றும் ரோஜர் செனவிரத்ன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்றைய தினம்(01.11.2026) வழக்கின் பொழுது பிணையில் வெளிவந்துள்ள விமல் வீரவன்ச உள்ளிட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழர்களின் நீதிக்காக நாடு கடந்து தொடரும் போராட்டம்! பிரித்தானியா - இந்தியா வரை மனிதநேய நடைப்பயணம்