எதிரணிகளை விமர்சிப்பதிலேயே நேரத்தை வீணாக்கும் அநுர: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் கவனம் செலுத்தாமல் பெரும்பாலான நேரத்தை எதிர்க்கட்சியினரை விமர்சிப்பதிலேயே செலவிட்டு வருகின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் நிரோஷன் பாதுக்க குற்றம் சாட்டினார்.
கொழும்பில் நேற்று(01.11.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன, மகாவலி திட்டம், 10 இலட்சம் வீடுகள் திட்டம், கொழும்புத் துறைமுக வளர்ச்சி, கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் தொழிற்புரட்சி போன்றவற்றைத் தகுதியான அமைச்சர்களிடம் ஒப்படைத்து நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்தினார்.
குற்றச்சாட்டு
ஆனால், தற்போதைய ஜனாதிபதி எந்தவொரு முறையான நிர்வாகத் திட்டமுமின்றி, தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டிக்கொண்டு மட்டுமே நேரத்தைக் கழித்து வருகின்றார்.
மேலும், நிதி அமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதியின் நிர்வாகத்தின் கீழ், நிதி அமைச்சில் இதுவரை 2.5 மில்லியன் டொலர்களும், தனியார் வங்கியொன்றில் 14 பில்லியன் ரூபாவும் காணாமல்போயுள்ளன.

காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான ஒருவரே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கெஸ்பேவ பகுதியில் கிராம மட்டத்தில் அரசை விமர்சிப்போரின் பட்டியலைச் சேகரிக்கக் கோரப்பட்டுள்ளது.அபிவிருத்தியை நோக்கியதாக இல்லாமல் அடக்குமுறையை நோக்கிய நகர்வாகவே உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri