கேப்பாபிலவு நிலமீட்பு போராட்ட குழுவின் கொட்டகை தீயிட்டு எரிப்பு
முல்லைத்தீவு - கேப்பாபிலவில் தங்கள் சொந்த நிலத்தினை மீட்பதற்காக கொட்டகை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போராட்டகாரர்களின் கொட்டகை இன்று (02.11.2026) அதிகாலை தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் சொந்த நிலத்தினை விடுவிக்க கோரி கேப்பாபிலவு மக்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இந்த நிலையில் கடந்த 21.10.2026 அன்று இராணுவத்தின் வசம் இருந்த 6.9 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்ட பின்னரும் ஏனைய மக்களுக்கு சொந்தமான காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாக காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

கேப்பாபிலவு இராணுவ வாயிலுக்கு முன்பாக கொட்டில் அமைந்து தங்கள் போராட்டத்தினை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நிலையில், மக்களின் போராட்ட கொட்டகை அங்குள்ள பதாதைகள் மற்றும் உபகரணங்கள் இரவு விசமிகளால் தீயிட்டு முற்றாக எரிக்கப்பட்டுள்ளது
இந்த சம்பவம் தொடர்பில் போராட்ட குழுவினால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்களின் போராட்டத்தினை முடக்கும் செயற்பாடாக இது அமைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அடுத்த சில மணி நேரங்களில் தீவிர சூறாவளி புயலாக வலுப்பெறும் முரசு! வானிலை மாற்றம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை




November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri