ஹிருனிகாவிற்கு எதிரான வழக்கு குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு
சர்வதேச மகளிர் தினமொன்றின் போது கறுவாத்தோட்ட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி பாதைகளை மறைத்து வீதி நாடகம் ஒன்றை நடத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட சிலருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் குறித்த விளக்கினை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு நீதான் உத்தரவிட்டுள்ள உத்தரவிட்டுள்ளார்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri