கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் நடைபெறவிருந்த பரீட்சைகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பு
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் நடைபெறவிருந்த பரீட்சைகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை வளாகத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை வளாகத்தில் குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் 324 பேருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இப் பரிசோதனையில் 36 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருந்த மாணவர்களுக்கே அதிக அளவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அம் மாணவர்கள் அதே விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், மாணவர்களுக்கு பரீட்சைகள் இடம்பெற இருந்த நிலையில் பரீட்சைகள் நடாத்துவது குறித்து சுகாதார ஆலோசனைகளை வழங்கி உள்ளதாகவும் குச்சவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
