கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காய்ச்சல், இருமல் காரணமாக நேற்றிரவு (15) திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வருகை தந்தபோது மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஏற்கனவே அங்கு சில மாணவர்களுக்கு கோவிட் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மீண்டும் திருகோணமலையில் தொற்று பரவி வருவதால் கடுமையாக சுகாதார
வழிமுறைகளை பின்பற்றுமாறும் சுகாதாரத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.





Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
