சுன்னாகத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்
சுன்னாகம் நகரப் பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் இன்றையதினம்(25) கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இராணுவ சிப்பாய் கைது
இன்று(25) காலை சுன்னாகம் நகரப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி இராணுவ சிப்பாய் ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த பெண் இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.
அதனை தொடர்ந்து குறித்த சந்தேகநபரான, மைலிட்டி இராணுவ முகாமில் கடமை புரியும் சிப்பாய் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக சி.நிதர்சன் பதவியேற்ற பின்னர் கைது நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam