ஒற்றுமை சீர்குலைந்தால் தமிழர்களின் நிலை மோசமாகும்: தவராசா கலையரசன் (Photos)

Sri Lanka Politician Sri Lankan political crisis Eastern Province
By Navoj Sep 24, 2023 06:22 AM GMT
Report

எமது ஒற்றுமை சீர்குலைக்கப்படுமானால் கிழக்கில் தமிழர்களின் நிலை மோசமாகும், அதிலும் அதிகம் பாதிக்கப்படப் போகின்ற மாவட்டங்களாக அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களே இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

பாண்டிருப்பில் நேற்று (23.09.2023) சனிக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மிகவும் ஆபத்தான நிலை

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டிலே தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒற்றுமை என்ற விடயத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கின்றோம். அரசியல்வாதிகளிடமும் இல்லை, மக்களிடமும் இல்லை என்ற ரீதியில் அழிவின் விழிம்பில் நின்றுகொண்டிருக்கின்றோம்.

ஒற்றுமை சீர்குலைந்தால் தமிழர்களின் நிலை மோசமாகும்: தவராசா கலையரசன் (Photos) | East Unity Disrupted Thavarasa Kalaiyarasan Warn

இந்தியாவிலே சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக இருக்கின்றார்கள். புலம்பெயர் தேசங்களிலே இலங்கைத் தமிழர்கள் சுமார் இருபது இலட்சம் பேர் வரை வாழ்கின்றார்கள். இந்த நிலையில் இங்கு எமது எதிர்காலம் எங்கே போய் முடியும்.

கிழக்கு மாகாணத்திலே விகிதாசாரத்தில் முஸ்லீம்கள் மார்தட்டிப் பேசுகின்றார்கள். இந்தநிலை நீடித்தால் எதிர்காலத்தில் கிழக்கு மண் எமது கைகளில் இருந்து விடுபடக் கூடிய வாய்பப்பு தான் இருக்கின்றது.

சமூக ஊடக சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல்: அமெரிக்கத் தூதுவர் எச்சரிக்கை

சமூக ஊடக சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல்: அமெரிக்கத் தூதுவர் எச்சரிக்கை

தமிழ் மக்களாகிய நாங்கள் எவ்வாறு இந்த நாட்டிலே வாழப்போகின்றோம் எமது மக்களுக்கான தீர்வு என்ன என்ற விடயத்திலே நாங்கள் தொடர்ச்சியாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஒற்றுமை சீர்குலைந்தால் தமிழர்களின் நிலை மோசமாகும்: தவராசா கலையரசன் (Photos) | East Unity Disrupted Thavarasa Kalaiyarasan Warn

கூட்டாக ஒற்றுமையாகச் செயற்படுவோம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ரீதியில் செயற்படும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எதிர்காலத்திலும் ஒருமித்துச் செயற்படும் அந்த ஒற்றுமையை நாங்கள் பலப்படுத்துவோம்.

எந்த சந்தர்ப்பத்திலும் அந்த ஒற்றுமை சீர்குலையக் கூடாது என்று கருதுபவன் நான். ஏனெனில் அவ்வாறு அந்த ஒற்றுமை சீர்குலைக்கப்படுமானால் கிழக்கில் தமிழ் மக்கள் பெரும் பாதிப்பினை எதிர்கொள்வார்கள்.

ஒற்றுமை சீர்குலைந்தால் தமிழர்களின் நிலை மோசமாகும்: தவராசா கலையரசன் (Photos) | East Unity Disrupted Thavarasa Kalaiyarasan Warn

அதிலும் அதிகம் பாதிக்கப்படப் போகின்ற மாவட்டங்களாக அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களே இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். தேர்தல் முறைமை காரணமாக சில சில நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த அடிப்படையில் எம்முடன் இணைந்திருந்த கட்சிகள் புதிய கட்சியொன்றை அமைத்திருக்கின்றார்கள். அது நீடிக்கப் போகின்ற விடயம் அல்ல. மீளவும் நாங்கள் கூட்டாக ஒற்றுமையாகச் செயற்படுவோம். அவ்வாறில்லாவிட்டால் கிழக்கில் தமிழ் மக்களே மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுவோம் என கலையரசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தையும் விசாரணை செய்ய வேண்டும்(Video)

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தையும் விசாரணை செய்ய வேண்டும்(Video)

இளம் கணவரை கொடூரமாக அடித்துக் கொலை செய்த மனைவி: நள்ளிரவில் நடந்த பயங்கரம்

இளம் கணவரை கொடூரமாக அடித்துக் கொலை செய்த மனைவி: நள்ளிரவில் நடந்த பயங்கரம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி: அமைச்சர் ரமேஷ் பத்திரன

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி: அமைச்சர் ரமேஷ் பத்திரன

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US