சமூக ஊடக சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல்: அமெரிக்கத் தூதுவர் எச்சரிக்கை
நாடு ஸ்திரத்தன்மையை அடைவதற்கான பயணத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பலியிடக் கூடாது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் வலியுறுத்தியுள்ளார்.
மகரகம இளைஞர் சேவை மன்ற மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வானது சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்
மக்கள் அமைதியான போராட்டங்கள் மூலமாகவோ, கலை வெளிப்பாடுகள் மூலமாகவோ அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவோ கருத்துக்களை வெளிப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலங்களை திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் அமெரிக்கத் தூதுவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
மேலும், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலங்களை திரும்பப் பெற வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) என கோரிக்கை விடுத்துள்ளது.

அவை ஜனநாயகம் மற்றும் மக்களின் சுதந்திரத்தின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் ஆகியவை தொடர்பில் நாட்டில் பாரிய அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam