தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்திக்கு பொது மக்கள் அஞ்சலி (Photos)
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி நெல்லியடி - பருத்தித்துறைக்குச் சென்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் வழிகாட்டுதலில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஊர்தி நேற்று(23.09.2023) மாலை நெல்லியடியை அடைந்தது.
மக்கள் அஞ்சலி
வடமராட்சி கிழக்கு கோவில் பகுதியில் இருந்து ஆரம்பித்து, தியாக தீபம் திலீபனின் ஊர்தி, பிற்பகல் 6:30 மணியளவில் நெல்லியடியை சென்றடைந்து, தொடர்ந்து பருத்தித்துறை ஊடாக இன்பருட்டிக்குச் சென்றது.
நெல்லியடி, பருத்தித்திறை பகுதியில் மக்கள் மலரஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து இன்பருட்டியில் விசேடமாக அமைக்கப்பட்ட பந்தலில் மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
மட்டக்களப்பு
தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் வரையில் வடகிழக்கில் உள்ள தமிழர்கள் தமது ஒற்றுமையினைக்காட்ட வேண்டும். அதற்காகவே தியாகதீபம் திலீபன் போன்றவர்கள் தியாகங்களை செய்துள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று மட்டக்களப்பில் உணர்வுபூர்வமான அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனால் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் கலந்துகொண்டவர்களும் ஈகச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.










Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
