போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் சட்ட திருத்தம்: நீதி அமைச்சு வெளியிட்ட தகவல்!
போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்களைத் தண்டிப்பது தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்வதில் நீதி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பில் பொதுமக்களால் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து, நேற்றைய தினம் (16.03.2023) இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச விளக்கமளித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் ஊடகத்திற்குக் கருத்து தெரிவித்துள்ளதாவது, போதைப்பொருள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் பழிவாங்கும் காரணங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோதனை முடிவு
எனவே, இது தொடர்பில் கடுமையான கண்காணிப்பு நடைமுறைப்படுத்தப்படும். போதைப்பொருள் தொடர்பான சில மாதிரிகள் எப்போதாவது தவறாக இருக்கலாம். ஆனால் சில நேரங்களில், பொலிஸார் அனுப்பிய கிட்டத்தட்ட 20-30 மாதிரிகள் தவறானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.
போதைப்பொருள் அல்லாத பொருட்கள் கூட போதைப்பொருளாக மாதிரி எடுக்க அனுப்பப்படுகின்றன. எனினும் இந்த பொருட்களுடன் சந்தேகத்துக்குரியவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகின்றபோது அவர் விளக்கமறியலுக்கு அனுப்பப்படுகிறார்.
சில மாதங்களுக்குப் பின்னரே அவர் வைத்திருந்தது போதைப்பொருளல்ல என்ற சோதனை
முடிவு கிடைக்கிறது.
இதிலிருந்து சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது தெளிவாகத் தெரிகிறது,
எனவே, இந்த சட்டத்தில் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என
விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri