இரட்டைக் குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தப்பிக்க முடியாது: விஜயதாச ராஜபக்ச
இரட்டைக் குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தப்பிக்க முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மக்களிடம் கோரிக்கை
இரட்டைக் குடியுரிமை கொண்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் இருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு பொது மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் இருந்தால் அது குறித்து தேடிப் பார்த்து நீதிமன்றிற்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை

இதேவேளை, இரட்டைக் குடியுரிமை தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சிலர் தங்களது இரட்டைக் குடியுரிமையை ரத்து செய்து கொண்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam