இலங்கை நாடாளுமன்றில் சுமார் பத்து இரட்டைக் குடியுரிமை கொண்ட எம்.பிக்கள்! சன்ன ஜயசுமன
இரட்டைக் குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கோரியுள்ளார்.
பத்து பேர் இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இலங்கை நாடாளுமன்றில் சுமார் பத்து இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பதவி விலக வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 22ம் திருத்தச் சட்டம்
22ம் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இரட்டைக் குடியரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டுமென கோரியுள்ளார்.
22ம் திருத்தச் சட்டத்தில் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பினை மதிக்க வேண்டுமாயின் இட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பதவி விலக வேண்டுமென பேராசிரியர் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டியுள்ளார்.

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan
